புங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் மூதாளர் ஓய்வூதியத்திட்டத்தின் கீழ் 12 வட்டாரங்களிலுமுள்ள முதியவர்களுக்கு 5ம் மாதத்திற்குரிய ஓய்வூதியத்தொகை வழங்கி வைக்கப்பட்டது இதுவரைகாலமும் 35 முதியவர்களுக்கு வழங்கிவந்த நிலையில் எம்மால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் மேலும் 16 முதியவர்களை இனங்கண்டு மொத்தமாக 51 பேருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.அன்பிற்கும் பாசத்திற்குமுரிய எம்மூரின் உறவுகளே இன்னும் தேவையுடைய முதியவர்கள் எம்மண்ணில் வாழ்ந்துவருகின்றனர் அவர்களுக்கும் ஓய்வூதிய உதவித்தொகை கிடைத்திட பெருமுயற்சி எடுத்து வருகின்றோம் உங்கள் உறவுகள் நினைவாகவோ அல்லது தனிப்பட்டவகையிலோ நிதிப்பங்களிப்பு நல்குவதன் மூலம் எதிர்காலத்தில் எஞ்சியுள்ள முதியவர்களுக்கும் வழங்கலாம் என நம்புகின்றோம்.எனவே விருப்பமுடைய கொடையாளர்கள் எம்மோடு தொடர்புகளை மேற்கொண்டு மேலதிக விபரங்களை அறிந்து கொள்ளலாம் என தெரிவித்துக்கொள்கிறோம்.