EMAIL US AT Pwa@Pungudutivu.org
CALL US NOW +94 77 235 9155
donate

நலன்புரிச்சங்கத்தினரின் “மூதாளர் ஓய்வூதியத்திட்டம்”

உதவியின்றி தவித்திடும் எம் ஊரின் மூத்தோருக்கு உதவிடும் நோக்கில் ஆரம்பித்து வைக்கப்பட்டதுதான் புங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினரின் “மூதாளர் ஓய்வூதியத்திட்டம்”அதனடிப்படையில் புங்குடுதீவு 12 வட்டாரங்களிலும் தெரிவுசெய்யப்பட்ட 35 முதியவருக்கு மாதாமாதம் 2000ரூபா வழங்கி வருகின்றோம்.அந்தவகையில் சித்திரைமாத ஓய்வூதியம் இன்று தொடக்கம் அவர்களது இல்லம் தேடிச்சென்று இன்று 14 பயனாளர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது. மிகுதிப்பேருக்கு நாளை வழங்கி வைக்கப்படும் என்பதை அறியத்தருகின்றோம்.👉பேரன்புக்குரிய எம் உறவுகளே!சித்திரைமாதத்தில் இருந்து மேலும் 15பேரை தெரிவு செய்து 50 பேருக்கு வழங்க சில உறவுகள் முன்வந்த போதும் தவிர்க்க முடியாத காரணத்தால் இந்த மாதம் செயற்படுத்த முடியவில்லை என்பதனை மனவருத்ததுடன் அறியத்தருகின்றோம். எமது சமூகசேவைப்பிரிவுப்பொறுப்பாளரினால் மூதாளர் தேர்வு நடைபெற்று வருகின்றது அது நிறைவுற்றதும் 5ம் மாசம் தொடக்கம் வழங்கிவைப்போம் என உறுதி கூறுகின்றோம்.
நீங்களும் உங்கள் பெற்றோர் உறவுகள் நினைவாகவோ அல்லது சுய விருப்பின் அடிப்படையிலோ மூதாளருக்கான ஓய்வூதியம் வழங்க விருப்பம் கொண்டால் எம்மோடு தொடர்பு கொள்ளுமாறு அன்புரிமையோடு கேட்டு நிற்கின்றோம்.

NEWSLETTER SIGN-UP

Subscribe to get the new updates!